வில்லிப்புத்தூர் என்றொருகால் சொன்னார் கழற்கமலம் சூடினோம்


- கி.ஜனார்த்தனன்

பிரபந்தத் தேன்துளிகள்..

பாண்டிய பட்டர் அருளிச் செய்தவை
மின்னார் தடமதிள் சூழ் வில்லிபுத்தூர் என்றொருகால் *
சொன்னார் கழற் கமலம் சூடினோம் * – முன்னாள்
கிழியறுத்தான் என்றுரைத்தோம் * கீழ்மையினிற் சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே! வந்து

'மதிலாலே சூழப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் என்று ஒரு முறை (என்றொருகால்) சொன்னவருடைய

கழற் கமலம் சூடினோம்- திருவடித்தாமரைகளை சிரமேற்கொண்டோம்.

 ஸ்ரீவில்லிபுத்தூர் என்பது மிகவும் அருமையான ஓர் ஊர்,  பாபத்தைப் போக்க வல்ல சப்தங்களின் சரமாக அமைந்த பெயராம் புனிதமிகு ஸ்ரீவில்லிபுத்தூர் என்ற பெயர். 

அந்தப் பெயரின் ஒலி நம் உள்ளங்களை சுத்தப்படுத்தும் என ஆழமாக நம்புவோம்.

பாண்டிய நாட்டில் புத்தூர் என்னும் ஊரை அடுத்த காட்டில் வாழ்ந்த வேடர் குலத் தலைவனுக்கும் அவனது மனைவி மல்லிக்கும் வில்லி, கண்டன் எனும் இரண்டு புதல்வர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. 

தன் தம்பியைக் காப்பாற்றிய திருமாலுக்கு வில்லி கோயில் அமைத்ததாகக் கூறப்படுகிறது.

பெரியாழ்வாரின் தாய்தந்தையர்கள் - முகுந்தபட்டர், பதுமவல்லி 

நம் தாயானவள் ஸ்ரீ ஆண்டாள் அவதரித்தை பூமி எனக் கொண்டாடுவோம். உள்ளத்தை பக்திச்சுவையில் நிரப்புவோம். 

சமஸ்கிருதத்தில் தண்டிபுரம் என்பதை ஓர் உபன்யாசத்தில் கேள்விப்பட்டேன். மேலும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

புருஷாகாரம் ( ஆண் வடிவு) வெளியாகாத காலத்திலே பர தத்வ நிர்ணயம் பண்ணி பொற்கிழியை அருத்தருளினார் என்று சொல்லப்பெற்றோம்; 

--- அதாவது, பெரியாழ்வார், ஆண்டாள் காலத்தில், ஸ்வாமி முதலில் நிரூபமாக அறியபபட்டாரா?

மின்னார் - (அனுமானம்) ஏதோ பளபளக்கும் பொருளால் உருவாக்கப்பட்ட மதிள் - மதில்

கீழ்மையினிற் சேரும் வழியறுத்தோம் நெஞ்சமே! வந்து - ஒ நெஞ்சே அதோகதியான நரகத்தில் சேருகைக்கு உண்டான வழியை அறுத்தோம்.

கீழ்மை - நரகம். உண்மையான வைணவ மனோபாவம்

வைணவ மஹாவாசனை குடிகொண்டுள்ள மனதில் நரகத்திற்கு வழிவிடும் எண்ணப்போக்குகள் மறையும். 

நகரத்தை அடைவதற்கான முக்கிய ஐந்து வழிகளை பஞ்சமா பாதகங்கள் என்போம். கொலை, களவு, பொய், கள், காமம்  ஆகியவையே பஞ்சமா பாதகங்கள்.

பொய்யும் காமமும் அன்றாட வாழ்க்கையில் எந்நேரத்திலும் நிகழக்கூடிய அபாயம் என்பதால் அந்தக் கடுமையான பாபங்களிலிருந்து தப்புவதற்கு  எம்பெருமானின் கதியே கதி என்றிருத்தல் வேண்டும்.

பிறவியின்றி வாழ, நாம் செய்வது நன்மையோ, தீமையோ அதை இறைவனின் பெயரால் செய்து அதன் முழுபலனையும்  பெருமாளின் பொற்பாதத்திலேயே ஒப்படைக்க வேண்டும்.

திருமால் குடிகொள்ளும்  நெஞ்சிலிருந்து தீமை பிறக்குமா...அப்படியே கர்மவினை காரணமாக உதித்தாலும் அதன் விளைவு  பெருமானுக்கே.


Comments