நற்குணக்கடல் நம் நாரணர் - Ocean of Auspiciousness

 


நமோ நாராயணாய, ஸ்ரீமதே ராமானுஜாய நமக

- கி.ஜனார்த்தனன் 

Who is God? He is the sum of all auspicious qualities (सर्व कल्याण गुणात्मने). That is the simplest, most pleasant definition of the Supreme Being. With skin the colour of rain-clouds, no one else can be as giving, nurturing and merciful as Lord Narayana. Here is stanza two from the Kamba Ramayanam:

சிற்குணத்தர்‌ தெரிவு அரு நல்‌ நிலை 

எற்கு உணர்த்த அரிது; எண்ணிய மூன்றனுள்‌ 

முற்‌ குணத்தவரே முதலோர்‌ அவர்‌

 நற்குணக கடல்‌ ஆடுதல்‌ நன்றுஅரோ.

சிற்குணத்தர் - மெய்யறிவினராகிய கடவுளின்,  சிற் - Chit (Consciousness) चित्

Awareness, or Pure consciousness. 

தெரிவு அரு நல் நிலை - அரு என்றால் அரிய , நல் நிலை என்றால் நல்ல தன்மை.  தெரிவு - to know, to be aware of

எற்கு - என்னால் எடுத்துரைத்து உணர்த்தல்  அரிது - கடினம், அபூர்வம்

எண்ணிய மூன்றனுள்‌ முற்‌ குணத்தவரே 

முற்குணம் - முற்பகுதி போல.. முற்பகல் போல...முற்குணம் என்றால் முன் குணம், சத்துவ குணம். Sattva guna (सत्त्व गुण), the mode of goodness as explained in the Bhagavat Gita.

திருவுடைய திருமாலானவர், எம்பெருமான் நாராயணர் பூர்ண சத்துவ குணம் உடையவர். இதர ஜீவகோடிகள் முக்குணக்கலவைகள். சத்துவம், ராஜசம், தாமசம் ஆகிய குணங்கள் கொண்டுள்ளனர்..

நற்குணக் கடல் - முழுமுதற் கடவுளான நாராயணர் என்பவர் எல்லா நல்ல தன்மைகளின் ஒட்டுமொத்தத் திரட்டு. 

To know Him is essentially to know the truth.

The phrase "अथातो ब्रह्मजिज्ञासा" (Athāto Brahmajijñāsā) is a well-known aphorism from the Vedanta-sutras (Brahma Sutras) of Badarayana. It translates to "Now, therefore, the inquiry into Brahman." 

பிரம்மத்தை உணர்வது பற்றி வேதாந்தம் ஆராய்கிறது. அந்த பிரம்மம், பரவாசுதேவன் என்ற பிரக்ஞை (விழிப்புணர்வு), பிறவிப்பிணியைத் தீர்க்க வல்லது. இதற்காக ஒருவர் சுற்றாவை விட்டுத் தவமிருத்தல் வேண்டும் என்ற கட்டாயத்தை பெரியவர்கள் நமக்காகத் தளர்த்தியுள்ளனர். ஜபமும் பஜனையும் நமக்கு பேரரிவை உணர்த்தும். 

கிருஷ்ணார்ப்பணம்.


Comments